விஜய் 61வது பட நடிகர்கள் யார் யார்- உறுதியான தகவலை வெளியிட்ட தயாரிப்பு குழு

விஜய்யின் 61வது படத்தை பற்றி நிறைய வதந்திகள் சமீபகாலமாக வந்த வண்ணம் உள்ளது. அண்மையில் கூட சமந்தா இப்படத்தில் நடிக்கவில்லை, கார்த்திகா நாயர் நடிக்கிறார் என கூறப்பட்டது.
இந்நிலையில் படத்தில் நடிப்பவர்கள் குறித்தும், படப்பிடிப்பு குறித்தும் ஒரு அறிக்கை ஒன்றை ஸ்ரீதேணான்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாகவும், அதனை தொடர்ந்து இந்தியாவில் பல பகுதிகளிலும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.
அதோடு படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா நாயகிகளாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யன், சத்யராஜும் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார்களாம்.

பைரவா எங்கள் திரையரங்கில் பெரிதும் வசூல் இல்லை, சென்னையின் பிரபல திரையரங்கம் அறிவிப்பு

இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பைரவா ரசிகர்களிடன் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து பொங்கல் விடுமுறையை முன்னிட்டு படத்திற்கு நல்ல வசூல் வந்தது.
ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தால் படத்தின் வசூலுக்கு பாதிப்பு வந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கமான உதயம் திரையரங்கின் மேனஜர் இதுக்குறித்து பேசியுள்ளார்.
துருவங்கள்-16 படம் எங்கள் திரையரங்கில் நல்ல வசூலை கொடுத்தது, ஆனால், பைரவா வருகையால், அந்த படத்தை எடுக்க வேண்டிய நிலை உருவானது.
பைரவா ஒரு சில காரணங்களால் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை’ என கூறியுள்ளார்

டோலிவுட்டில் வில்லனாக களமிறங்கும் பிரசன்னா

தமிழில் ஹீரோவாக ஒரு சில படங்கள் நடித்தவர் பிரசன்னா. தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறையவே அஞ்சாதே படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். பிறகு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் அவர்.
சாய் தரண் தேஜ் நாயகனாக நடிக்கும் ”ஜவான்” படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்ததுள்ளது. இதனை ஜவான் பட இயக்குனர் ரவியும் உறுதி செய்துள்ளார். நாகார்ஜூனா நடிப்பில் 2013ல் வெளிந்த “பாய்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பிரசன்னா, நான்கு வருட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கின்றார்.
ஏற்கனவே அவர் விஷால் நடித்துவரும் துப்பறிவாளன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முடிந்தவுடன் அவர் இந்த தெலுங்கு படத்தில் நடிக்க தொடங்குவார் என கூறப்படுகிறது.

லாரன்ஸ் இப்படி ஏமாற்றிவிட்டாரே- கதறும் சின்னத்திரை பிரபலம் டிங்கு, வீடியோ உள்ளே

சிறுவயதில் ரஜினி, கமல் போன்ற முன்னணி ஜாம்பவான்களுடன் நடித்து பெயர் பெற்றவர் டிங்கு. இவர் தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகின்றார்.
இந்நிலையில் டிங்கு தன் நண்பர் ராபர்ட்டும் இணைந்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளனர். அந்த படத்திற்கு அமிரிஷ் என்பவரை இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளனர்.
அமிரிஷ் அந்த படத்தை தயாரிக்கவும் சம்மதித்துள்ளார். இதன் பிறகு அமிரிஷிற்கு மொட்டை சிவா கெட்ட சிவா படத்தில் இசையமைக்கும் பணி கிடைத்துள்ளது.
டிங்குவின் படத்தில் போட்ட அனைத்து டியுனையும் லாரன்ஸ் படத்திற்கு கொடுத்துள்ளார், இதை அறிந்த டிங்கு அமிரிஷையும், லாரன்ஸையும் கடுமையாக சாடியுள்ளார். இதுமட்டுமின்றி தன்னை ஏமாற்றிவிட்டதாக கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதோ வீடியோவாக பார்க்க...

என் இதயமே நொறுங்கியது- சோகத்தில் தனுஷ்

ட்விட்டரில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரும், ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடாலும் மோதினர்.
விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் பெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி நடாலை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியனாக முடிசூடினார்.
நடிகர் தனுஷ் ரபேல் நடாலின் தீவிர ரசிகர், இந்த போட்டியில் அவர் தோல்வியை தழுவியதால் என் இதயமே நொறுங்கியது என்று ட்வீட் செய்துள்ளார், அதே சமயம் ரோஜருக்கும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

மீண்டும் விஜய்யுடன் இணைகிறாரா அமலாபால்- அவரே சொல்கிறார்

பிரபலங்கள் விவாகரத்து என்பது அவர்களை விட அவர்களது ரசிகர்களுக்கு பெறும் வருத்தத்தை தரக்கூடிய ஒரு விஷயம்.
அப்படி ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய செய்தி, ஏ.எல். விஜய், அமலாபால் விவாகரத்து தான். தற்போது அமலாபால் மீண்டும் ஏ.எல். விஜய்யுடன் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, விஜய்யும், நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. நானும், விஜய்யும் வாழ்வின் வேறு நிலையில் சந்தித்திருந்தால் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம்.
எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் அவர் தான் எனக்கு பிடித்த நபர் என்று அமலா கூறியுள்ளார்

லாரன்ஸ் படங்களுக்குள் வந்த பிரச்சனை! ஒரே நாளில் சாத்தியமா?

லாரன்ஸ் நடித்து நீண்ட காலமாக கிடப்பில் இருந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. இந்த படத்தை வரும் 17ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் அதே தேதியில் தான் லாரன்ஸின் மற்றொரு படமான சிவலிங்கா வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் எந்த படம் தள்ளிப்போகும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
பி.வாசு இயக்கியுள்ள சிவலிங்கா படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார். வைகைப்புயல் வடிவேலு காமெடியனாக கலக்கியுள்ளார்.

தமிழ் புத்தாண்டில் விருந்தளிக்க வரும் சூப்பர் ஸ்டாரின் `2.0' டீசர்



<2.0/>
<2.0 movie/>
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது `எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான `2.0' படத்தை சூப்பர் ஸ்டார்  ரஜினியை வைத்து இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாக உள்ள  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  ஏமி ஜாக்சன் நடித்து வருகிறார். 

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்க, நிரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஜனவரி 30-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. அதற்காக மகாபலிபுரத்தில்  பிரம்மாண்டமான செட்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் `2.0' படத்தின் டீசரை தமிழ் புத்தாண்டு அன்று(ஏப்ரல் 14)-ம்  தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. +

படத்தை தீபாவளி விருந்தாக அக்டோபர் 19-ம் தேதி வெளியிடவும்  படக்குழு திட்டமிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பலாம்: கபிலன் வைரமுத்து எச்சரிக்கை


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் வெற்றியடைந்துள்ளதையடுத்து, இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக அவர்களுக்கு மேலும் ஆலோசனைகளை கூறும்விதமாகவும் கவிஞர் கபிலன் வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தை பிறந்தால் வழி பிறக்கும். இங்கே புரட்சி பிறந்திருக்கிறது. இதற்கு கருபொருளாகவும் எரிபொருளாகவும் இருந்த இளைஞர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

பல்வேறு விவாதங்கள் நிகழும் இந்நேரத்தில் ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத்தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. Social media என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி ஃபேஸ்புக் – டுவிட்டர் போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன. அவர்களின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி.

ஆனால் இந்த நிறுவனம் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள்.


இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம். அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் sino weibo என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம்.

மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெலாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழு அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

தான் சார்ந்த சமூகத்தின் பண்புகளைப் பாதுகாக்க நினைப்பதும் அதன் பெருமைகளைப் பாடுவதும் மனித இயல்பு. அதை ஒடுக்க நினைப்பதுதான் இறையாண்மைக்கு எதிரான செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்களின் அடையாளம் புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியம் என்ற தத்துவமும் மேம்படுகிறது. தமிழர்களைப் புரிந்துகொள்ளாத சில அரசியல் சக்திகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர் சம்மதத்துடன் காதலரை மணக்கும் பிச்சைக்காரன் நாயகி

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த சாத்னா டைட்டஸுக்கு இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சில படங்களில் கமிட்டாகி நடிக்கவும் ஆரம்பித்தார்.

இந்நிலையில், பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தி என்பவரை சாத்னா டைட்டஸ் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளிவந்தது. இதையடுத்து, சாத்னாவின் தாயார் தனது மகளை ஏமாற்றி, ஆசை வார்த்தைகள் கூறி கார்த்தி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக போலீசில் புகார் கொடுத்தார். 

ஆனால், போலீசார் விசாரணையில் கார்த்திக்கை தான் மனப்பூர்வமாக காதலித்துதான் திருமணம் செய்துகொண்டதாக சாத்னா கூறினார். மேலும், இருவீட்டார் சம்மதத்துடன் கார்த்திக்கை மணந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், இருவீட்டார் தரப்பிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. 

அதன்படி, வருகிற பிப்ரவரி 6-ந் தேதி இவர்களது திருமணம் சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கார்த்திக்-சாத்னா டைட்டஸ் ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். 

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10-ந் தேதி சென்னை வடபழனியில் அமைந்துள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெறும் திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

கதை இல்லாமல் பட விழாவுக்கு நடிகை வருவதால் படம் ஓடாது: நயன்தாரா



புதிய படத்தின் அறிமுக விழா, விளம்பர நிகழ்ச்சிகளில் அதில் நடித்த நடிகர்-நடிகைகள் பங்கேற்பது வழக்கம். ஆனால்  நயன்தாரா அவர் நடித்த படங்களுக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. இதை காரணம் காட்டி  தெலுங்கு படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு சிறிது காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.


ஒரு விழாவில் பேசிய விவேக் “பட விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்” என்று  கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு நயன்தாரா அளித்த பதில்...

“நான் பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்று குற்றச்சாட்டு கூறுகிறார்கள். படத்தில் நடிக்க என்னிடம் கதை சொல்ல  வரும்போதே, நான் பட விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை தயாரிப்பாளரிடம் சொல்லி விடுகிறேன். எனக்கென்று  ஒரு கொள்கை வைத்து இருக்கிறேன்.




தொலைக்காட்சிகளில் அமர்ந்து படம்பற்றிய ஒரே வி‌ஷயத்தை எல்லோரிடமும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இன்று  எல்லாமே மாறி விட்டது. டிஜிட்டல் மயம் ஆகிவிட்டது. வித்தியாசமான விளம்பர யுத்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. ‘தனி  ஒருவன்’, ‘மாயா’ போன்ற படங்களை நான் விளம்பரப்படுத்தி இருக்கிறேன். சிறிய படங்களுக்கும் நான் கட்டாயம் விளம்பரம்  செய்தே ஆக வேண்டிய நேரங்களிலும் என்னால் முடிந்தவற்றை செய்கிறேன்.

நடிகர், நடிகைகள் விளம்பரம் செய்வதால் ஒரு மோசமான படத்தை ஓட வைத்து விட முடியாது. படத்தின் விளம்பரத்தை விட  அதன் கதை நன்றாக இருந்தால்தான் அது ஓடும். மோசமான படத்தை 100 நாள் விளம்பரம் செய்தாலும் தோல்விதான்  கிடைக்கும்.

படவிழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளுக்கு கடைசி பகுதி சம்பளத்தை குறைத்து விடலாம் என்பது போன்று விவேக்  சார் என்னைப்பற்றி சொல்லி இருக்கிறார். என்னுடைய சம்பளத்தை பலமுறை விட்டுக்கொடுத்திருக்கிறேன். சில படங்களுக்கு  என் சம்பளத்தை குறைத்து இருக்கிறேன்”.

அரசு வேலைக்கு காத்திருக்காமல் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட தங்கர் பச்சான் வலியுறுத்தல்

;
நாகை மாவட்டம் பூம்புகாரில் வெளிநாடு வாழ் வலைதள இளைஞர்கள் அமைப்பு சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர் களிடம்  கூறியதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தி தமிழர்களின்  பண்டைய வீரவிளையாட்டான ஜல்லிக் கட்டை மீட்டதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது தமிழகத்தில் வறட்சி, புயல் உள்ளிட்ட இடர்பாடுகளால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.  ஜல்லிக்கட்டுக்காக போராடியது போல், விவசாயிகள் நலனுக்காக இளைஞர்கள் போராட முன்வர வேண்டும்.

ஆண்டுதோறும் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசி, பருப்பு, உளுந்து, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களை அதிக  அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதனால் நம் நாட்டில் விளையும் உணவுப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல்  விவசாயிகள் அவதிப்படுகிறார்கள்.

தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். விவசாயம்  பாதிக்கப் பட்டதால் இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்காதது வருத்தம் அளிக்கிறது.  விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் ஆறுகள், ஏரிகளை தூர்வார வேண்டும். வருங்காலங்களில் இளைஞர்கள்  விவசாயத்தில் ஈடுபட வேண்டும். வருங்காலத்தில் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில்  விவசாய சங்கங்கள் தனித்தனியாக இயங்குவதால்தான் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் பிரச்சினைகளை  கண்டுகொள்வதில்லை. விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் சுமார் 1.25 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்துள்ளனர்.  இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்காமல் விவசாயத்தில் அதிக அளவில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜய்-அட்லி இணையும் படம் 80-களில் நடக்கும் கதையா? புதிய தகவல்

‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், சமந்தா, காஜல் அகர்வால், ஜோதிகா, கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் ஒருசில காட்சிகளை 80-களில் நடப்பதுபோன்று காட்சிப்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் நடக்கும் காட்சிகளுக்காகத்தான் விஜய் தற்போது தாடி, முறுக்கு மீசையுடன் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது. 80-களில் நடக்கும் காட்சிகளை மதுரையில் படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வான நிலையில், பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் தொடங்கப் போவதாகவும், அதைத் தொடர்ந்து பின்னி மில் மற்றும் சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டுடியோவிலும் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

விஜய் 61வது படத்தின் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்கள்தான்

தெறி வெற்றியை தொடர்ந்து மீண்டும் அட்லீயுடன், விஜய் இணைவதால் இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
இதனால் படத்தில் நடிக்கும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இப்படத்தில் வேலை செய்ய இருக்கும் கலைஞர்கள் பற்றிய முழு விவரம் வெளியாகியுள்ளது. இதோ அந்த விவரம்
  • நடிகைகள்- ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால்
  • மற்ற நடிகர்கள்- சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா. கோவை சரளா, சத்யன்
  • இசையமைப்பாளர்- ஏ.ஆர். ரகுமான்
  • எடிட்டிங்- ஆண்டனி ரூபன்
  • ஒளிப்பதிவு- ஜி.கே. விஷ்ணு
  • கலைத்துறை- முத்துராஜ்

மனம் கவர்ந்த நாயகிகள் பட்டியலில் பிரியா எந்த இடம் தெரியுமா?

சினிமாவில் நடிக்கும் நாயகிகளை மட்டும் ரசிகர்கள் விரும்புவதில்லை. சீரியல்களில் நடிக்கும் சில நாயகிகளும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றனர்.
பிரபல தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பலரின் கனவுக் கன்னியாக இருந்தவர் பிரியா பவானிஷங்கர்.
இவர் கடந்த 2016ம் ஆண்டில் மனம் கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியலில் 23வது இடத்தை பிடித்துள்ளார்.
இதில் பெருவாரியான இடங்களை சினிமா நடிகைகளே கைப்பற்றியுள்ள நிலையில் சீரியலில் நடித்த பிரியாவும் இடம்பிடித்திருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இதென்னப்பா விஜய், அஜித் படத்திற்கே வந்த சோதனை, பாகுபலி-2 வைத்த செக்

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி-2 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிய தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் தான் தமிழகத்தில் வாங்கியுள்ளது, இதனால் விஜய், அஜித்திற்கு என்ன சோதனை என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது.
இப்படத்தின் தமிழகத்தின் வெளியீட்டு உரிமம் தொகை ரஜினி படத்திற்கு நிகராக உள்ளதாம்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித் படங்களை காட்டிலும் அதிக தொகை கொடுத்து பாகுபலி-2 வாங்கப்பட்டுள்ளதாம். ஒரு தெலுங்கு படத்திற்கு தமிழகத்தில் இப்படி ஒரு மார்க்கெட் உருவாகியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் நஷ்டமடைந்த பைரவா

பைரவா ரூ 80 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகிய படம். இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பை வைத்திருந்தனர்.
படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பி.சி செண்டரில் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் முதல் 4 நாட்கள் ஓடியது.
அதை தொடர்ந்தும் படத்தில் நல்ல வரவேற்பு இருக்க, ஓரளவிற்கு நல்ல லாபம் எடுத்துவிடலாம் என விநியோகஸ்தர்கள் நினைத்து வந்தனர்.
ஆனால், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பைரவா படத்தின் கூட்டம் பல மடங்கு குறைந்துள்ளது, இதனால் வசூலும் பெரிதாக அடிவாங்கியுள்ளது.
வெளிநாடுகளிலும் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அம்மாவுக்கு ஏன் கோவில் கட்டினேன் - மனதை உருக்கும் லாரன்ஸ் விளக்கம்

திரையில் கதாநாயகர்களாக இருப்பவர்களில் சிலர் மட்டும் தான் நிஜத்திலும் அதேபோன்று இருப்பர். அப்படி ஒருவர் தான் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளை நடத்திவருவதுடன் பல ஏழைக்குழந்தைகளுக்கு அறுவை சிகி்ச்சைக்கு உதவி வருகிறார். சமீபத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு ரூ. 1 கோடி வரை உதவி செய்து கதாநாயகனாக ஜொலித்தார்.
இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தன்னுடைய தாயை பற்றி நினைவு கூர்ந்தார். எனக்கு சிறுவயதில் கைகால்கள் சரியாக இல்லை. வறுமையில் இருந்த போதும் என்னை தூக்கிக்கொண்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மருத்துவம் பார்த்தார். பேருந்து கட்டணத்தை கூட குறைத்துக்கொண்டு எனக்கு பிடிக்கும் என்பதற்காக ரோஸ்மில்க் வாங்கித்தருவார்.
இதுபோன்று பல விஷயங்களில் தியாகம் செய்து என்னை வளர்த்தார். அந்த நன்றிக்காகத்தான் அவருக்கு கோவில் கட்டினேன். அவருக்கு விருப்பம் இல்லாதபோதும் மற்றவர்கள் இதைப்பற்றி பேசுவது என் தாயாருக்கு மகிழ்ச்சியை தரவேண்டும் என்று நினைத்தேன் என்றார்.
மேலும், இதை பார்த்தாவது பணத்தை செலுத்தி முதியோர் இல்லங்களில் பெற்றவர்களை விடும் பிள்ளைகள் திருந்தவேண்டும் என்று விரும்பினேன்.

மஞ்சிமாவின் பேவரட் சாங் தற்போது இதுதானாம்

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் மஞ்சிமா மோகன். இவர் அடுத்து விக்ரம் பிரபு, உதயநிதி, விஷ்ணு ஆகிய நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர்கள் தற்போது உங்களின் பேவரட் பாடல் எது என கேட்க, யுவனின் தரமணி படத்தில் உள்ள யாரோ பாடல் தான் என் பேவரட் என கூறியுள்ளார்.

சிறப்பான நாளில் வெளியாகும் எமன்! படக்குழு செண்டிமெண்ட்

விஜய் ஆண்டனி இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கவனிக்கப்படும் முன்னனி நடிகர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பார்ப்போரின் மனங்களில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் நல்ல வரவேற்பை பெற்று மற்ற மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
சைத்தான் படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் எமன் படம் வரும் ஃபிப்ரவரி மாதம் 24 தேதி மஹா சிவராத்திரியை முன்னிட்டு வெளியிடப்படுகிறது.
நான் படத்தின் இயக்குனர் ஜீவா சங்கர் இயக்க லைக்கா நிருவனத்தோடு விஜய் ஆண்டனி ஃபிலிம் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்

2016ல் அஜித், கமல் படத்தை தவிர மற்ற அனைவரின் படங்களும் திரைக்கு வந்தது. இதில் எல்லோருக்கும் லாபம் கொடுத்த படங்களில் தெறி தான் முதலிடம்.
அப்படியிருக்க சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கின் கடந்த வருட டாப்-10 லிஸ்டில் தெறி இடம்பெறவில்லை.
ஏனெனில் தெறி செங்கல்பட்டு பகுதியில் இரண்டு வாரம் கழித்தே ரிலிஸ் ஆனது, வெற்றியிலும் அப்படித்தான், அதன் காரணமாகவே தெறி லிஸ்டில் இடம்பெறவில்லை என கூறப்படுகின்றது.
  1. கபாலி
  2. ஜங்கிள் புக்
  3. ரெமோ
  4. அச்சம் என்பது மடமையடா
  5. இருமுகன்
  6. ரஜினிமுருகன்
  7. தங்கல்
  8. சென்னை-28 பார்ட் 2
  9. கான்ஜுரிங்-2
  10. 24

வாய்ப்புக்காக இலியானா நிர்வாண போஸ்

கோலிவுட், டோலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்து பாலிவுட் ஆசையில் சென்ற பல தென்னிந்திய ஹீரோயின்கள் ஒன்றிரண்டு படங்களோடு மூட்டை கட்டிக்கொண்டு திரும்பினர். ஒன்றிரண்டு நடிகைகள் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடித்து வருகின்றனர். இவர்களைப் போலவே தென்னிந்திய பட வாய்ப்புகளை ஏற்க மறுத்து பாலிவுட் சென்றார் இலியானா. ரன்பீர் கபூருடன் ஜோடியாக நடித்த பர்பி இந்தி படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வருமென்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 5 வருடங்கள் ஆகியும் 5 படங்கள் மட்டுமே இந்தியில் நடித்திருக்கிறார்.

கைநிறைய வாய்ப்புகள் பெற பாலிவுட் ஹீரோயின்கள் பயன்படுத்தும் டெக்னிக்குகளை பயன்படுத்தினார். பாய்பிரண்டுடன் டேட்டிங், செக்ஸ் பற்றி வெளிப்படையான கருத்து, நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிடுவது என தன்னை டிரெண்டிலேயே வைத்திருக்க முயற்சித்து வருகிறார்.  இதெல்லாம் அவரைபற்றி பரபரப்பாக பேச வைத்ததே தவிர வாய்ப்பு மழை கொட்டுவதற்கான பலனை தரவில்லை. மனம் நொந்த இலியானா மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க முயன்றார்.

இதற்கிடையில் வெவ்வேறு இளம் ஹீரோயின்கள் தென்னிந்திய படங்களில் பிரபலமாகி மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்த படங்களாக வெளியிட்டு வந்த நிலையில் உச்சகட்ட முயற்சியாக நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘பாத்ரூம் டப்’பில் நிர்வாணமாக படுத்திருப்பதுபோன்ற அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த முயற்சியாவது அவருக்கு பட வாய்ப்பை அள்ளித்தருமா என்பதை பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

கிளாமருக்கு நோ சொல்லும் ஹீரோயின்

கிளாமராக நடித்தால்தான் தாக்குபிடிக்க முடியும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில நடிகைகள் கிளாமராக நடிக்க நோ சொல்கின்றனர். அந்த பட்டியலில் சுனேனாவும் சேர்ந்திருக்கிறார். காதலில் விழுந்தேன், மாசிலாமணி, நீர்பறவை, வம்சம், நம்பியார் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவருக்கு பட வாய்ப்புகள் அரிதாகவே வருகிறது. கிளாமர் வேடத்தில் நடிக்க மறுப்பதால் தான் அவருக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. கடைசியாக அவர் நடிப்பில் கவலை வேண்டாம் படம் திரைக்கு வந்தது. இது ஏ ஜோக்குகள் நிறைந்த படமாக இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. 

இந்நிலையில் சுனேனா புதிய படங்களில் நடிக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார். அவர் தரப்பில் வாய்ப்பு கேட்டுச் செல்லும் போது கிளாமராக நடிக்க வேண்டும் என இயக்குனர்கள் சொல்வதால் நொந்து போயிருக்கிறார். திறமையை வெளிப்படுத்தி நல்ல நடிகை என பெயர் வாங்கினால் போதும் கிளாமர் நடிகை என்ற பெயர் வேண்டாம் என சொல்வதால் அவரை இயக்குனர்கள் கண்டு கொள்ளாமல் வேறு ஹீரோயினை தேடிச் செல்கிறார்களாம்.

நடிகையை சிலிர்க்க வைத்த நடிகர்



சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு இரு கன்னத்திலும் குழி விழுகிறது. அவருக்கு இது அதிர்ஷ்டத்தை அள்ளித் தந்திருக்கிறதா என்றபோது பதில் அளித்தார். அவர் கூறியது: நிச்சயமாக அதிர்ஷ்டம்தான். கடந்த ஆண்டில் தர்மதுரை, அச்சமின்றி உள்ளிட்ட நான் நடித்திருந்த 4 படங்கள் ஹிட்டாக அமைந்தன. இந்த வெற்றி எனக்கு சும்மா கிடைத்துவிட வில்லை. அதிர்ஷ்டத்துடன் எனது கடுமையான போராட்டமும் இதில் உள்ளடங்கி இருக்கிறது.

இவை எனக்கு சந்தோஷத்தை தந்திருக்கிறது. இந்த ஆண்டில் நான் நடிக்கும் 10 படங்கள் ரிலீஸ் ஆகும். ‘1971- பியான்டு தி பார்டர்’ என்ற படத்தில் முதன்முறையாக மோகன்லாலுடன் நடிக்கிறேன். மேஜர் ரவி இயக்குகிறார். இவர்கள் இருவரது கூட்டணியில் நடிக்கிறேன் என்று எண்ணும்போதே என் உடல் சிலிர்க்கிறது.

இப்படத்துக்கு ஒப்பந்தம் ஆன நாள் முதல் எப்போது மோகன்லாலுடன் படப்பிடிப்பில் பங்கேற்போம் என்று துடித்துக்கொண்டிருந்தேன். அவருடன் நடிக்கத் தொடங்கியவுடன் ஜாம்பவானுடன் நடித்ததுபோன்ற பெருமை ஏற்பட்டது. ஆனால் படத்தில் நான் அல்லு சிரிஷுக்கு ஜோடியாகத்தான் நடிக்கிறேன். ராணுவ பின்னணியில் அமைந்த கதையான இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் உருவாகிறது. இவ்வாறு சிருஷ்டி டாங்கே கூறினார். 

தனுஷ் ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்

கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபமா. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் நடித்த ஹீரோயின்களில் இவரும் ஒருவர். தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார். கடந்த பொங்கல் தினத்தன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்து ராம் சரண் ஹீரோவாக நடிக்க சுகுமார் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அவரை படத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இயக்குனர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடிக்க முடியாது என்பதால் அனுபமாவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை தேடிவருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 

இதையறிந்து வருத்தத்தில் இருக்கிறார் அனுபமா. இதுகுறித்து தனது டுவிட்டரில் உண்மை என்ற கேப்ஷனுடன்,’என் வாழ்வில் நான் பின்னடைவை சந்தித்திருக்கிறேன். என் வாழ்வில் நல்ல விஷயங்கள் சிலவற்றில் நான் எப்போதும் ஒதுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிகிறது. அதேசமயம் அது இன்னொரு நல்ல விஷயத்தை நோக்கி மாற்றியிருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ், சிவகார்த்திகேயனை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்த சிம்பு

2016ம் ஆண்டிற்கான ரசிகர்களின் விரும்பத்தக்க நடிகர் யார் என்ற கருத்துக்கணிப்பு அண்மையில் நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் நடிகர் சிம்பு முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் தனுஷ், அனிருத், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளனர். தற்போது அந்த விவரத்தை பார்ப்போம்.
  • சிம்பு
  • தனுஷ்
  • அனிருத்
  • விஜய் சேதுபதி
  • சிவகார்த்திகேயன்
  • ஆர்யா
  • கார்த்தி
  • நிவின் பாலி
  • ஹிப் ஹாப் ஆதி
  • ராணா டக்குபதி

மீனவர்களுக்கும் நிதிஉதவி செய்த ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களோடு கடைசிவரை கலந்து கொண்டார்.
போரட்டக்காரர்களுக்கு தேவையான உணவுகளையும், மருத்துவ வசதிகளையும் தன் செலவில் உடனே செய்து கொடுத்தார்.
அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் கடைசி நேரத்தில் கண் திருஷ்டி பட்டது போல சில சம்பவங்கள் நடந்துவிட்டது.
ஒத்துழைப்பாக இருந்த காவல்துறைக்கு நன்றி சொல்லி, அவர்களோடு நாமும் சேர்ந்து மகிழ்ச்சியை வெளிபடுத்தும் நேரத்தில் ஏதேதோ நடந்துவிட்டது.
அமைதியான போரட்டத்தின் முடிவில் எங்களுக்கு ஆளுநரின் அறிக்கையை காட்டியிருந்தால் அமைதியாக போயிருந்திருப்போம்.
தன்னடக்கதோடு செயல்பட்டு முதல்வர் நிரந்தர சட்டம் கொண்டுவந்ததற்கும், பிரதமர் அவர்களுக்கும் அனைவரின் சார்பாக நேரில் சென்று நன்றி சொல்ல போகிறோம்.
சென்னையில் மீனவரின் கடைகள் கடும் சேதமடைந்ததால் அதை சரிசெய்ய எனது சார்பாக 10 லட்சம் ரூபாய்யை நிதியுதவியாக அளிக்கிறேன்.
அதை மாணவர்கள் மூலம் நான் கொடுக்கப்போகிறேன். நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.
மெரினா கடற்கரையில் ஏதோ மாணவர்கள் கட்சி ஆரம்பிக்கப்போகிறார்களாமே. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

அரங்கத்தை அதிர வைத்த 'அஜித் 57' பட பாடலின் ஹம்மிங்

சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு அல்லது ரம்ஜான் விருந்தாக அஜித் ரசிகர்களுக்காக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் கம்போஸ் பணியில் அனிருத் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் அனிருத் கம்போஸ் செய்த ஒரு பாடலை மலேசியாவை சேர்ந்த பிரபல ஹிப்ஹாப் பாடகர் யோகி பி என்ற யோகேஸ்வரன் வீரசிங்கம் என்பவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதை பார்த்தோம். 

இந்நிலையில் இந்த பாடல் குறித்து யோகி சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் ஒருசில தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த பாடல் மிக மிக பிரமாண்டமாக வந்துள்ளதாகவும், தல ரசிகர்களை போலவே இந்த பாடலை கேட்கவும், திரையில் பார்க்கவும் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.

மேலும் அனிருத் ஒரு ரியல் EDM இசைக்கலைஞர் என்றும் அவருடன் பணிபுரிந்தது தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும் கூறிய அவர் அந்த பாடலின் ஹம்மிங்கையும் பாடி காட்டினார். 'தல 57' பாடலின் ஹம்மிங்கை யோகி பாடியபோது அரங்கமே அதிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Kategori

Kategori