டாக்குமெண்ட்ரீ தான், ஆனால், 3 நாளில் இத்தனை கோடி வசூலா- சச்சின் சாதனை

மைதானத்தில் தான் பல ஆயிரம் ரன்களை அடித்து சாதனை படைத்தவர் சச்சின். ஆனால், தற்போது திரையரங்குகளிலும் வசூலில் சாதனை படைக்க ஆரம்பித்துவிட்டார்.
சச்சினின் வாழ்க்கை வரலாறை சச்சின் பல கோடி கனவுகள் என்ற பெயரில் படமாக எடுத்துள்ளனர், கடந்த வாரம் இப்படம் திரைக்கு வந்தது.
இப்படம் தோனி படம் போல் இல்லாமல் டாக்குமெண்ட்ரீ போல் இருந்தது, அதனால், ரசிகர்களிடம் வரவேற்பு பெருமா? என்று நினைத்தார்கள்.
ஆனால், 3 நாளில் இப்படம் ரூ 33 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அனுஷ்காவால் தாமதமாகும் பாகுபலி-2 டிரைலர்

அனுஷ்காவால் தாமதமாகும் பாகுபலி-2 டிரைலர்

‘பாகுபலி-2’ படம் ஏப்ரல் மாதம் 28-ந்தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புதிய போஸ்டர் சிவராத்திரி தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. ஆனால் ‘பாகுபலி-2’-ன் டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் அனுஷ்கா என்று கூறப்படுகிறது. 

‘பாகுபலி’ முதல் பாகத்தில் ஒல்லியாக இருந்த அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகரித்தார். இதனால் குண்டாகி விட்டார். ‘பாகுபலி-2’ படத்திலும் முதல் பாகத்தைப்போல அனுஷ்கா இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கால அவகாசம் கொடுத்தார். 

படத்தின் மற்ற காட்சிகளை படமாக்கி விட்டு அனுஷ்கா தொடர்பான காட்சிகளை தாமதமாக எடுத்தார். அதற்குள் உடல் எடையை குறைத்து விடுவேன் என்று கூறிய அனுஷ்கா எடையை குறைக்க எடுத்த முயற்சிகள் அவர் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. எனவே வேறு வழியில்லாமல் குண்டு அனுஷ்காவை வைத்தே ‘பாகுபலி-2’-ஐ ராஜமவுலி படமாக்கினார். 
இதில் அவரது உருவத்தை கிராபிக்ஸ் மூலம் ஒல்லி ஆக்கி இருக்கிறார்கள். இதற்கான கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால்தான் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் வெளியாக காலதாமதம் ஆகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவும் ஒரு காரணம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கும் ராஜமௌலி, ‘டிரைலர் தாமதத்துக்கு இது மட்டும் காரணம் அல்ல’ என்றும் தெரிவித்து இருக்கிறார்.
விபத்து ஏற்படுத்திய ரஜினி மகள்- சீரியஸ் நிலைமையில் ஓட்டுனர்

விபத்து ஏற்படுத்திய ரஜினி மகள்- சீரியஸ் நிலைமையில் ஓட்டுனர்

இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் விபத்து, கொலை என நிறைய அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன. யாருக்கு என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா இன்று ஆழ்வார்பேட்டையில் பயணம் செய்திருக்கிறார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுனர் மணிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் அங்கு சில மணி நேரத்தில் பரபரப்பு சூழல் நிலவியது. ஆனால் ஒருசிலர் அந்த ஓட்டுனர் சீரியஸ் நிலைமையில் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
நடிகர் தனுஷ் நேரில் சென்று சமரசம் செய்ததால், காவல்துறையில் இந்த விபத்து தொடர்பாக புகார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் ‘விவேகம்’ ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது?



அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிவரும் ‘விவேகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கட்டுமஸ்தான உடம்புடன் அஜித் தோன்றிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த உற்சாகத்துடனேயே அஜித் பிறந்தநாளான மே 1-ந் தேதி இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஜுன் முதல் வாரத்தில் இப்படத்தின் ஆடியோவையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 

முதல் நாளே முக்கிய நபரிடம் இருந்து போன்! யார் அவர், அட்லீ ஷாக்

இளையதளபதி விஜய் நடிப்பில் விஜய் 61 படம் இன்று சிறப்பு பூஜையுடன் சென்னையில் துவங்கியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தொடங்கியது.
பின் படக்காட்சிகள் பின்னி மில்லில் எடுக்கப்பட்டது, ரசிகர்களை குசிப்படுத்திய இச்செய்தியை தொடர்ந்து இப்போது அட்லீயும் குஷியாகியுள்ளார். முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.
மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆசிர்வாதமாகவும் இருந்தது. கனவுகள் பலிக்கிறது. எதிர்பாராத விதமாய் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் சர்ப்ரைசிங் ஆக இருந்தது என அட்லீ தன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

விஜய் 61வது பட நடிகர்கள் யார் யார்- உறுதியான தகவலை வெளியிட்ட தயாரிப்பு குழு

விஜய்யின் 61வது படத்தை பற்றி நிறைய வதந்திகள் சமீபகாலமாக வந்த வண்ணம் உள்ளது. அண்மையில் கூட சமந்தா இப்படத்தில் நடிக்கவில்லை, கார்த்திகா நாயர் நடிக்கிறார் என கூறப்பட்டது.
இந்நிலையில் படத்தில் நடிப்பவர்கள் குறித்தும், படப்பிடிப்பு குறித்தும் ஒரு அறிக்கை ஒன்றை ஸ்ரீதேணான்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாகவும், அதனை தொடர்ந்து இந்தியாவில் பல பகுதிகளிலும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.
அதோடு படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா நாயகிகளாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யன், சத்யராஜும் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார்களாம்.

பைரவா எங்கள் திரையரங்கில் பெரிதும் வசூல் இல்லை, சென்னையின் பிரபல திரையரங்கம் அறிவிப்பு

இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பைரவா ரசிகர்களிடன் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து பொங்கல் விடுமுறையை முன்னிட்டு படத்திற்கு நல்ல வசூல் வந்தது.
ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தால் படத்தின் வசூலுக்கு பாதிப்பு வந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கமான உதயம் திரையரங்கின் மேனஜர் இதுக்குறித்து பேசியுள்ளார்.
துருவங்கள்-16 படம் எங்கள் திரையரங்கில் நல்ல வசூலை கொடுத்தது, ஆனால், பைரவா வருகையால், அந்த படத்தை எடுக்க வேண்டிய நிலை உருவானது.
பைரவா ஒரு சில காரணங்களால் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை’ என கூறியுள்ளார்

டோலிவுட்டில் வில்லனாக களமிறங்கும் பிரசன்னா

தமிழில் ஹீரோவாக ஒரு சில படங்கள் நடித்தவர் பிரசன்னா. தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறையவே அஞ்சாதே படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். பிறகு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் அவர்.
சாய் தரண் தேஜ் நாயகனாக நடிக்கும் ”ஜவான்” படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்ததுள்ளது. இதனை ஜவான் பட இயக்குனர் ரவியும் உறுதி செய்துள்ளார். நாகார்ஜூனா நடிப்பில் 2013ல் வெளிந்த “பாய்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பிரசன்னா, நான்கு வருட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கின்றார்.
ஏற்கனவே அவர் விஷால் நடித்துவரும் துப்பறிவாளன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முடிந்தவுடன் அவர் இந்த தெலுங்கு படத்தில் நடிக்க தொடங்குவார் என கூறப்படுகிறது.

லாரன்ஸ் இப்படி ஏமாற்றிவிட்டாரே- கதறும் சின்னத்திரை பிரபலம் டிங்கு, வீடியோ உள்ளே

சிறுவயதில் ரஜினி, கமல் போன்ற முன்னணி ஜாம்பவான்களுடன் நடித்து பெயர் பெற்றவர் டிங்கு. இவர் தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகின்றார்.
இந்நிலையில் டிங்கு தன் நண்பர் ராபர்ட்டும் இணைந்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளனர். அந்த படத்திற்கு அமிரிஷ் என்பவரை இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளனர்.
அமிரிஷ் அந்த படத்தை தயாரிக்கவும் சம்மதித்துள்ளார். இதன் பிறகு அமிரிஷிற்கு மொட்டை சிவா கெட்ட சிவா படத்தில் இசையமைக்கும் பணி கிடைத்துள்ளது.
டிங்குவின் படத்தில் போட்ட அனைத்து டியுனையும் லாரன்ஸ் படத்திற்கு கொடுத்துள்ளார், இதை அறிந்த டிங்கு அமிரிஷையும், லாரன்ஸையும் கடுமையாக சாடியுள்ளார். இதுமட்டுமின்றி தன்னை ஏமாற்றிவிட்டதாக கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதோ வீடியோவாக பார்க்க...

என் இதயமே நொறுங்கியது- சோகத்தில் தனுஷ்

ட்விட்டரில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரும், ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடாலும் மோதினர்.
விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் பெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி நடாலை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியனாக முடிசூடினார்.
நடிகர் தனுஷ் ரபேல் நடாலின் தீவிர ரசிகர், இந்த போட்டியில் அவர் தோல்வியை தழுவியதால் என் இதயமே நொறுங்கியது என்று ட்வீட் செய்துள்ளார், அதே சமயம் ரோஜருக்கும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

மீண்டும் விஜய்யுடன் இணைகிறாரா அமலாபால்- அவரே சொல்கிறார்

பிரபலங்கள் விவாகரத்து என்பது அவர்களை விட அவர்களது ரசிகர்களுக்கு பெறும் வருத்தத்தை தரக்கூடிய ஒரு விஷயம்.
அப்படி ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய செய்தி, ஏ.எல். விஜய், அமலாபால் விவாகரத்து தான். தற்போது அமலாபால் மீண்டும் ஏ.எல். விஜய்யுடன் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, விஜய்யும், நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. நானும், விஜய்யும் வாழ்வின் வேறு நிலையில் சந்தித்திருந்தால் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம்.
எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் அவர் தான் எனக்கு பிடித்த நபர் என்று அமலா கூறியுள்ளார்

லாரன்ஸ் படங்களுக்குள் வந்த பிரச்சனை! ஒரே நாளில் சாத்தியமா?

லாரன்ஸ் நடித்து நீண்ட காலமாக கிடப்பில் இருந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. இந்த படத்தை வரும் 17ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் அதே தேதியில் தான் லாரன்ஸின் மற்றொரு படமான சிவலிங்கா வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் எந்த படம் தள்ளிப்போகும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
பி.வாசு இயக்கியுள்ள சிவலிங்கா படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார். வைகைப்புயல் வடிவேலு காமெடியனாக கலக்கியுள்ளார்.

தமிழ் புத்தாண்டில் விருந்தளிக்க வரும் சூப்பர் ஸ்டாரின் `2.0' டீசர்



<2.0/>
<2.0 movie/>
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது `எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான `2.0' படத்தை சூப்பர் ஸ்டார்  ரஜினியை வைத்து இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாக உள்ள  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  ஏமி ஜாக்சன் நடித்து வருகிறார். 

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்க, நிரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஜனவரி 30-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. அதற்காக மகாபலிபுரத்தில்  பிரம்மாண்டமான செட்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் `2.0' படத்தின் டீசரை தமிழ் புத்தாண்டு அன்று(ஏப்ரல் 14)-ம்  தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. +

படத்தை தீபாவளி விருந்தாக அக்டோபர் 19-ம் தேதி வெளியிடவும்  படக்குழு திட்டமிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பலாம்: கபிலன் வைரமுத்து எச்சரிக்கை


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் வெற்றியடைந்துள்ளதையடுத்து, இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக அவர்களுக்கு மேலும் ஆலோசனைகளை கூறும்விதமாகவும் கவிஞர் கபிலன் வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தை பிறந்தால் வழி பிறக்கும். இங்கே புரட்சி பிறந்திருக்கிறது. இதற்கு கருபொருளாகவும் எரிபொருளாகவும் இருந்த இளைஞர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

பல்வேறு விவாதங்கள் நிகழும் இந்நேரத்தில் ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத்தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. Social media என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி ஃபேஸ்புக் – டுவிட்டர் போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன. அவர்களின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி.

ஆனால் இந்த நிறுவனம் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள்.


இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம். அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் sino weibo என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம்.

மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெலாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழு அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

தான் சார்ந்த சமூகத்தின் பண்புகளைப் பாதுகாக்க நினைப்பதும் அதன் பெருமைகளைப் பாடுவதும் மனித இயல்பு. அதை ஒடுக்க நினைப்பதுதான் இறையாண்மைக்கு எதிரான செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்களின் அடையாளம் புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியம் என்ற தத்துவமும் மேம்படுகிறது. தமிழர்களைப் புரிந்துகொள்ளாத சில அரசியல் சக்திகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர் சம்மதத்துடன் காதலரை மணக்கும் பிச்சைக்காரன் நாயகி

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த சாத்னா டைட்டஸுக்கு இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சில படங்களில் கமிட்டாகி நடிக்கவும் ஆரம்பித்தார்.

இந்நிலையில், பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தி என்பவரை சாத்னா டைட்டஸ் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளிவந்தது. இதையடுத்து, சாத்னாவின் தாயார் தனது மகளை ஏமாற்றி, ஆசை வார்த்தைகள் கூறி கார்த்தி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக போலீசில் புகார் கொடுத்தார். 

ஆனால், போலீசார் விசாரணையில் கார்த்திக்கை தான் மனப்பூர்வமாக காதலித்துதான் திருமணம் செய்துகொண்டதாக சாத்னா கூறினார். மேலும், இருவீட்டார் சம்மதத்துடன் கார்த்திக்கை மணந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், இருவீட்டார் தரப்பிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. 

அதன்படி, வருகிற பிப்ரவரி 6-ந் தேதி இவர்களது திருமணம் சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கார்த்திக்-சாத்னா டைட்டஸ் ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். 

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10-ந் தேதி சென்னை வடபழனியில் அமைந்துள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெறும் திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

கதை இல்லாமல் பட விழாவுக்கு நடிகை வருவதால் படம் ஓடாது: நயன்தாரா



புதிய படத்தின் அறிமுக விழா, விளம்பர நிகழ்ச்சிகளில் அதில் நடித்த நடிகர்-நடிகைகள் பங்கேற்பது வழக்கம். ஆனால்  நயன்தாரா அவர் நடித்த படங்களுக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. இதை காரணம் காட்டி  தெலுங்கு படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு சிறிது காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.


ஒரு விழாவில் பேசிய விவேக் “பட விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்” என்று  கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு நயன்தாரா அளித்த பதில்...

“நான் பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்று குற்றச்சாட்டு கூறுகிறார்கள். படத்தில் நடிக்க என்னிடம் கதை சொல்ல  வரும்போதே, நான் பட விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை தயாரிப்பாளரிடம் சொல்லி விடுகிறேன். எனக்கென்று  ஒரு கொள்கை வைத்து இருக்கிறேன்.




தொலைக்காட்சிகளில் அமர்ந்து படம்பற்றிய ஒரே வி‌ஷயத்தை எல்லோரிடமும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இன்று  எல்லாமே மாறி விட்டது. டிஜிட்டல் மயம் ஆகிவிட்டது. வித்தியாசமான விளம்பர யுத்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. ‘தனி  ஒருவன்’, ‘மாயா’ போன்ற படங்களை நான் விளம்பரப்படுத்தி இருக்கிறேன். சிறிய படங்களுக்கும் நான் கட்டாயம் விளம்பரம்  செய்தே ஆக வேண்டிய நேரங்களிலும் என்னால் முடிந்தவற்றை செய்கிறேன்.

நடிகர், நடிகைகள் விளம்பரம் செய்வதால் ஒரு மோசமான படத்தை ஓட வைத்து விட முடியாது. படத்தின் விளம்பரத்தை விட  அதன் கதை நன்றாக இருந்தால்தான் அது ஓடும். மோசமான படத்தை 100 நாள் விளம்பரம் செய்தாலும் தோல்விதான்  கிடைக்கும்.

படவிழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளுக்கு கடைசி பகுதி சம்பளத்தை குறைத்து விடலாம் என்பது போன்று விவேக்  சார் என்னைப்பற்றி சொல்லி இருக்கிறார். என்னுடைய சம்பளத்தை பலமுறை விட்டுக்கொடுத்திருக்கிறேன். சில படங்களுக்கு  என் சம்பளத்தை குறைத்து இருக்கிறேன்”.

அரசு வேலைக்கு காத்திருக்காமல் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட தங்கர் பச்சான் வலியுறுத்தல்

;
நாகை மாவட்டம் பூம்புகாரில் வெளிநாடு வாழ் வலைதள இளைஞர்கள் அமைப்பு சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர் களிடம்  கூறியதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தி தமிழர்களின்  பண்டைய வீரவிளையாட்டான ஜல்லிக் கட்டை மீட்டதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது தமிழகத்தில் வறட்சி, புயல் உள்ளிட்ட இடர்பாடுகளால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.  ஜல்லிக்கட்டுக்காக போராடியது போல், விவசாயிகள் நலனுக்காக இளைஞர்கள் போராட முன்வர வேண்டும்.

ஆண்டுதோறும் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசி, பருப்பு, உளுந்து, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களை அதிக  அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதனால் நம் நாட்டில் விளையும் உணவுப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல்  விவசாயிகள் அவதிப்படுகிறார்கள்.

தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். விவசாயம்  பாதிக்கப் பட்டதால் இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்காதது வருத்தம் அளிக்கிறது.  விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் ஆறுகள், ஏரிகளை தூர்வார வேண்டும். வருங்காலங்களில் இளைஞர்கள்  விவசாயத்தில் ஈடுபட வேண்டும். வருங்காலத்தில் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில்  விவசாய சங்கங்கள் தனித்தனியாக இயங்குவதால்தான் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் பிரச்சினைகளை  கண்டுகொள்வதில்லை. விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் சுமார் 1.25 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்துள்ளனர்.  இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்காமல் விவசாயத்தில் அதிக அளவில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜய்-அட்லி இணையும் படம் 80-களில் நடக்கும் கதையா? புதிய தகவல்

‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், சமந்தா, காஜல் அகர்வால், ஜோதிகா, கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் ஒருசில காட்சிகளை 80-களில் நடப்பதுபோன்று காட்சிப்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் நடக்கும் காட்சிகளுக்காகத்தான் விஜய் தற்போது தாடி, முறுக்கு மீசையுடன் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது. 80-களில் நடக்கும் காட்சிகளை மதுரையில் படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வான நிலையில், பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் தொடங்கப் போவதாகவும், அதைத் தொடர்ந்து பின்னி மில் மற்றும் சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டுடியோவிலும் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

விஜய் 61வது படத்தின் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்கள்தான்

தெறி வெற்றியை தொடர்ந்து மீண்டும் அட்லீயுடன், விஜய் இணைவதால் இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
இதனால் படத்தில் நடிக்கும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இப்படத்தில் வேலை செய்ய இருக்கும் கலைஞர்கள் பற்றிய முழு விவரம் வெளியாகியுள்ளது. இதோ அந்த விவரம்
  • நடிகைகள்- ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால்
  • மற்ற நடிகர்கள்- சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா. கோவை சரளா, சத்யன்
  • இசையமைப்பாளர்- ஏ.ஆர். ரகுமான்
  • எடிட்டிங்- ஆண்டனி ரூபன்
  • ஒளிப்பதிவு- ஜி.கே. விஷ்ணு
  • கலைத்துறை- முத்துராஜ்

மனம் கவர்ந்த நாயகிகள் பட்டியலில் பிரியா எந்த இடம் தெரியுமா?

சினிமாவில் நடிக்கும் நாயகிகளை மட்டும் ரசிகர்கள் விரும்புவதில்லை. சீரியல்களில் நடிக்கும் சில நாயகிகளும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றனர்.
பிரபல தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பலரின் கனவுக் கன்னியாக இருந்தவர் பிரியா பவானிஷங்கர்.
இவர் கடந்த 2016ம் ஆண்டில் மனம் கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியலில் 23வது இடத்தை பிடித்துள்ளார்.
இதில் பெருவாரியான இடங்களை சினிமா நடிகைகளே கைப்பற்றியுள்ள நிலையில் சீரியலில் நடித்த பிரியாவும் இடம்பிடித்திருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இதென்னப்பா விஜய், அஜித் படத்திற்கே வந்த சோதனை, பாகுபலி-2 வைத்த செக்

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி-2 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிய தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் தான் தமிழகத்தில் வாங்கியுள்ளது, இதனால் விஜய், அஜித்திற்கு என்ன சோதனை என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது.
இப்படத்தின் தமிழகத்தின் வெளியீட்டு உரிமம் தொகை ரஜினி படத்திற்கு நிகராக உள்ளதாம்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித் படங்களை காட்டிலும் அதிக தொகை கொடுத்து பாகுபலி-2 வாங்கப்பட்டுள்ளதாம். ஒரு தெலுங்கு படத்திற்கு தமிழகத்தில் இப்படி ஒரு மார்க்கெட் உருவாகியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் நஷ்டமடைந்த பைரவா

பைரவா ரூ 80 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகிய படம். இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பை வைத்திருந்தனர்.
படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பி.சி செண்டரில் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் முதல் 4 நாட்கள் ஓடியது.
அதை தொடர்ந்தும் படத்தில் நல்ல வரவேற்பு இருக்க, ஓரளவிற்கு நல்ல லாபம் எடுத்துவிடலாம் என விநியோகஸ்தர்கள் நினைத்து வந்தனர்.
ஆனால், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பைரவா படத்தின் கூட்டம் பல மடங்கு குறைந்துள்ளது, இதனால் வசூலும் பெரிதாக அடிவாங்கியுள்ளது.
வெளிநாடுகளிலும் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அம்மாவுக்கு ஏன் கோவில் கட்டினேன் - மனதை உருக்கும் லாரன்ஸ் விளக்கம்

திரையில் கதாநாயகர்களாக இருப்பவர்களில் சிலர் மட்டும் தான் நிஜத்திலும் அதேபோன்று இருப்பர். அப்படி ஒருவர் தான் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளை நடத்திவருவதுடன் பல ஏழைக்குழந்தைகளுக்கு அறுவை சிகி்ச்சைக்கு உதவி வருகிறார். சமீபத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு ரூ. 1 கோடி வரை உதவி செய்து கதாநாயகனாக ஜொலித்தார்.
இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தன்னுடைய தாயை பற்றி நினைவு கூர்ந்தார். எனக்கு சிறுவயதில் கைகால்கள் சரியாக இல்லை. வறுமையில் இருந்த போதும் என்னை தூக்கிக்கொண்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மருத்துவம் பார்த்தார். பேருந்து கட்டணத்தை கூட குறைத்துக்கொண்டு எனக்கு பிடிக்கும் என்பதற்காக ரோஸ்மில்க் வாங்கித்தருவார்.
இதுபோன்று பல விஷயங்களில் தியாகம் செய்து என்னை வளர்த்தார். அந்த நன்றிக்காகத்தான் அவருக்கு கோவில் கட்டினேன். அவருக்கு விருப்பம் இல்லாதபோதும் மற்றவர்கள் இதைப்பற்றி பேசுவது என் தாயாருக்கு மகிழ்ச்சியை தரவேண்டும் என்று நினைத்தேன் என்றார்.
மேலும், இதை பார்த்தாவது பணத்தை செலுத்தி முதியோர் இல்லங்களில் பெற்றவர்களை விடும் பிள்ளைகள் திருந்தவேண்டும் என்று விரும்பினேன்.

மஞ்சிமாவின் பேவரட் சாங் தற்போது இதுதானாம்

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் மஞ்சிமா மோகன். இவர் அடுத்து விக்ரம் பிரபு, உதயநிதி, விஷ்ணு ஆகிய நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர்கள் தற்போது உங்களின் பேவரட் பாடல் எது என கேட்க, யுவனின் தரமணி படத்தில் உள்ள யாரோ பாடல் தான் என் பேவரட் என கூறியுள்ளார்.

சிறப்பான நாளில் வெளியாகும் எமன்! படக்குழு செண்டிமெண்ட்

விஜய் ஆண்டனி இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கவனிக்கப்படும் முன்னனி நடிகர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பார்ப்போரின் மனங்களில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் நல்ல வரவேற்பை பெற்று மற்ற மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
சைத்தான் படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் எமன் படம் வரும் ஃபிப்ரவரி மாதம் 24 தேதி மஹா சிவராத்திரியை முன்னிட்டு வெளியிடப்படுகிறது.
நான் படத்தின் இயக்குனர் ஜீவா சங்கர் இயக்க லைக்கா நிருவனத்தோடு விஜய் ஆண்டனி ஃபிலிம் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

டாப்-10 வசூல் லிஸ்டில் தெறி வராதது ஏன்? இது தான் காரணம்

2016ல் அஜித், கமல் படத்தை தவிர மற்ற அனைவரின் படங்களும் திரைக்கு வந்தது. இதில் எல்லோருக்கும் லாபம் கொடுத்த படங்களில் தெறி தான் முதலிடம்.
அப்படியிருக்க சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கின் கடந்த வருட டாப்-10 லிஸ்டில் தெறி இடம்பெறவில்லை.
ஏனெனில் தெறி செங்கல்பட்டு பகுதியில் இரண்டு வாரம் கழித்தே ரிலிஸ் ஆனது, வெற்றியிலும் அப்படித்தான், அதன் காரணமாகவே தெறி லிஸ்டில் இடம்பெறவில்லை என கூறப்படுகின்றது.
  1. கபாலி
  2. ஜங்கிள் புக்
  3. ரெமோ
  4. அச்சம் என்பது மடமையடா
  5. இருமுகன்
  6. ரஜினிமுருகன்
  7. தங்கல்
  8. சென்னை-28 பார்ட் 2
  9. கான்ஜுரிங்-2
  10. 24

Kategori

Kategori